சென்னை பிரேசில் பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் இடையில் சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் ஒரே இடத்தில் நின்றதால் பயணிகள் அவதி.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.