வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..