சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.