கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் உருவாகி வரும் சர்வதேச ஹாக்கி மைதானம். டர்ப் எனப்படும் செயற்கை புல் விரிப்பு அமைக்கப்பட்டு பளிச் என்று காட்சி அளிக்கிறது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.