இங்கே ஏதோ தண்ணீர் பைப் உடைந்து விட்டது என நினைக்க வேண்டாம் ... கோவை ஆவாரம்பாளையம் ரோட்டிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் செய்த தீ தடுப்பு ஒத்திகை தான் இது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..