மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.