மெரினா கடற்கரையை தொடர்ந்து, நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற, பல்வேறு கடற்கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பாலவாக்கம் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.