தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.