கடலூர் ஆல்பேட்டை தென்பண்ணையாற்று பாலத்தில் மின்விளக்கு பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த லைட்டுகளை மர்ம நபர் லைட்டுகளை தூக்கி ஆற்றில் போட்டு விட்டார். அதை ஊழியர்கள் கயிறு மூலம் மேலே தூக்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..