ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த, 13, 19 வயது வரையிலான பெண்களுக்கான, 'மிஸ் டீன்ஸ் இன்டர்நேஷனல்' அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் நாட்டின் லொரினா ரூய்ஸ்க்கு மகுடம் சூட்டப்பட்டது.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..