சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க குடை பிடித்தும், சேலை மற்றும் துப்பட்டாவை தலையில் அணிந்தபடியும் சென்ற பெண்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..