விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், இந்த பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பந்தல்களில் வைப்பதற்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற மக்கள். இடம்: மும்பை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..