திருவள்ளூர் அடுத்த புட்லுாரிலிருந்து, அரண்வாயல் செல்லும் சாலை, 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. நெமிலி அகரம் அரசு குவாரியில் மண் ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக லாரியால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், லாரிகளை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..