மீஞ்சூர் ஒன்றியம் கீரப்பாக்கம் கிராமத்தில், தேவம்பட்டு - புதுகுப்பம் சாலையோரத்தில் கம்பி வேலி அமைக்கப்படாமலும், திறந்த நிலையிலும் உள்ள கிணற்றால், கால்நடைகள் மற்றும் கிராம மக்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..