ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, பெரிய குளத்தில், மத நல்லிணக்க முகரம் பண்டிகை நடைபெற்றது. இங்கு ஒரு பழக்கம் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தலையில் நெருப்பை போட்டுக்கொள்வர்.
சென்னையில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து சிக்னலில் வாகன ஓட்டிகள் தவிப்பதை தடுக்க, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில். இடம்: எல்.பி., சாலை, அடையாறு
சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டி, லோக்சபா
எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் தலைமையில்
எதிர்க்கட்சியினர் பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் சார்பில் 23வது அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைத்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: திருவொற்றியூர்.