கோவை பேரூர் படித்துறையில் புதிய தர்ப்பணம் மண்டபத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..