சென்னையில் 214 புதிய அரசு போக்குவரத்து கழக பஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் அமைச்சர்கள், எம்பி.,க்கள் மற்றும் அதிகாரிகள். இடம்: தீவுத்திடல்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..