மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் ஆன்மிக மற்றும்சமூகப் பணியினை பாராட்டி அவருக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹச்.வி. ஹண்டே, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இணைந்து வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..