சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மழை பொழிந்த நிலையில் குரோம்பேட்டை பகுதியில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரையை நோக்கி வந்த ரயில்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வந்தன. இடம். குரோம்பேட்டை.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.