ஸ்ரீ சரஸ்வதி கலாலயா பரதநாட்டிய பள்ளியின், அரங்கேற்ற விழா கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சவுமியா தேவி, காளிதாசன், காவியா, தேவதர்ஷினி, குழுவினரின் அரங்கேற்ற நாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..