பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவை அரசூர் கே.பி. ஆர்.,கல்லூரியில் துவங்கியது. இதில் கபடி போட்டியில் விளையாடிய சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ். ஜி.ஜி. கன்யா குருகுலம் பள்ளி அணிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..