காரமடை ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சி ராசடியில் அமைத்துள்ள மரகத பூங்கா திறக்கப்பட்டது. இதில் உள்ள நடை பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையில் ஊராட்சி தலைவர் ரங்கசாமி, வன சரக அலுவலர் ரும்யா, வனவர் ராதாகிருஷ்ணன் பள்ளி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் நடந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..