தள்ளு,தள்ளு, தள்ளு:மானாமதுரையில் இருந்து சிவகங்கை வந்த அரசு பஸ் மன்னர் துரைசிங்கம் கல்லூரி அருகே வந்தவுடன் வேகத்தடையில் ஏறி இறங்கியதும் பேருந்து ஆப் ஆகி நின்றது பிறகு எடுக்க முடியாமல் அங்கிருந்தவர்கள் தள்ளிவிட பஸ் கிளம்பியது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..