கோவை மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் மாநில அளவில் நடக்கவுள்ள கூடைப்பந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.
கோவையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடந்தது. இதில் தொழுகைக்குப் பின் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட சிறுவர்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கோவையில் இன்னும் சில பகுதிகளில் கட்சி சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் தான் உள்ளன. இடம்: காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு.
வடநாட்டுக்காரங்க அதிகமா ஆயிட்டாங்க போல இருக்கு...! கோவையில் கேஸ் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல அதிகரிக்க துவங்கியதால் சில சிறிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர்.