புதுச்சேரி அடுத்த பாகூர் பகுதிகளில் நடவு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைக்காத நிலையில் 100 திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்கள் மரத்தடியில் ஹாயாக ஓய்வெடுக்கின்றனர்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..