இன்றைய போட்டோ

மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் 49 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் அமைச்சர் சிவசங்கர் பணி நியமன ஆணையை வழங்கினார். உடன் இடமிருந்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.பி., சண்முகம், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஆகியோர்.
13-Jun-2024
இன்றைய போட்டோ20-Mar-2026

2/

3/
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மெய்டி சமூகத்தினர் சைரோபா எனப்படும் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டி இம்பாலில் உள்ள ஒரு வீட்டில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாரம்பரிய உணவுகளை வாழை இலையில் வைத்து வழிபட்டனர். மெய்டி-கூகி பழங்குடியினர் மோதலால் வன்முறைக் காடான மணிப்பூரில் பண்டிகைகளை கொண்டாடும் அளவுக்கு நிலைமை சீரடைந்துள்ளது.
20-Mar-2026

4/
ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள எம்பிக்கள், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய நிதியமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
20-Mar-2026

5/

6/

7/
அடடே நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை என தேர்தல் கமிஷன் சொன்னதால் திரையை விலக்கினர். ஆனாலும் அவர்கள் கையில் அரசியல் உள்ளது எனக் கூறி அதில் கிளவுஸ் போன்ற துணியால் மறைத்து கடமையாற்றி உள்ளனர். இடம்: கே.கே.நகர், மதுரை.
20-Mar-2026

8/

9/
மேற்காசிய போர் காரணமாக தொழிற்சாலை எரிவாயு மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர்.
20-Mar-2026

10/

