ஊட்டியில், தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு மையம் சார்பாக நடந்த விழிப்புணர்வு பேரணியில், கலந்துக்கொண்ட அரசு நர்சிங் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.
வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.
மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..