மழைநீர் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்தில் பணிகள் முடிந்தும் சாலையை முழுமையாக போடாமல் விட்டதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இடம் : கே.கே சாலை,சோழிங்கநல்லூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..