மந்த்ராலயம் சென்றிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்தை தரிசித்தார். அவருக்கு ஆசி வழங்கிய ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமி, பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..