திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு 1 ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க இலவச பாட புத்தகங்களை அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம் .புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.