ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை அதரித்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். காலை நடைபயிற்சியின் போது, ஸ்டாலின் சம்பத்நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..