புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங் கட்சி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவருடன் வந்திருந்த பேண்ட் வாத்தியம் இசைக்கு நடனமாடி வந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் தங்கள் காலணிகளை எடுத்து அடித்துக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..