திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி பகுதியில் லோக்சபா தேர்தலையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் வாசகம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..