சிறுமுகை அருகே உள்ள தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ வைபவம் நடந்தது. இதில் சீதா ராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வலம் வந்தார்.
கோவையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடந்தது. இதில் தொழுகைக்குப் பின் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட சிறுவர்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கோவையில் இன்னும் சில பகுதிகளில் கட்சி சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் தான் உள்ளன. இடம்: காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு.
வடநாட்டுக்காரங்க அதிகமா ஆயிட்டாங்க போல இருக்கு...! கோவையில் கேஸ் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல அதிகரிக்க துவங்கியதால் சில சிறிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர்.