பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவையில் கலந்து கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சியின் துவக்க இடமான எரு கம்பெனி பகுதியை பா.ஜ., கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி., முருகானந்தம், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..