திருப்பூர் பழைய மார்கெட் வீதியில், கடை உரிமையாளர்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ளதாக, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, மைக் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவிப்பு வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..