புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் சிக்னலை தாங்கி இருக்கும் பைப்புகளுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் நிலையில் அங்கு ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டுவிட்டு பணியில் ஒரு போலீசாரும் இல்லாததால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..