நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான கடனுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் அன்பரசன், நேரு. இடம்:தலைமச்செயலகம், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..