கழுகு பார்வையில் காரமடை கடை தெரு......என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கிராமத்து திருவிழாவில் கலந்து கொண்டால் அலாதி பிரியம் தான்........காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா கடைத்தெருவில் ராட்டினம் ராட்சச தூரிகள் இரவு ஒளியில் மின்னின.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.