கோவை அரசு மருத்துவமனையில் தரமற்ற பொருட்களால், தூய்மை பணியை செய்த தூய்மை பணியாளர் மூச்சு திணறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.