திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா பத்தாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.