புதுச்சேரி காமராஜ் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பெட் ஷீட்டிகள் ஒரு ஜோடி 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது புதுசா பழையசா என வாங்கி பார்த்தால் தான் தெரியும்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.