விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தி தண்டபாணி மாட்டு வண்டியில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்டிஓ விஷ்ணு பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.