குர்பத்வந்த்சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த உளவு அதிகாரி யார் : அமெரிக்க ‛பகீர்'
குர்பத்வந்த்சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த உளவு அதிகாரி யார் : அமெரிக்க ‛பகீர்'
UPDATED : ஏப் 29, 2024 07:11 PM
ADDED : ஏப் 29, 2024 06:56 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த்சிங் பன்னூனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்திய உளவு அதிகாரியின் பெயரை அமெரிக்க பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதே போன்று கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இந்திய உளவு அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‛‛வாஷிங்டன் போஸ்ட்'' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்யும் முயற்சியில் சிசி-1 என்ற ரகசிய ஏஜென்டாக இந்தியா உளவு அமைப்பின் ‛ரா ' அதிகாரி விக்ரம் யாதவ் என்பவரின் தலைமையிலான குழு நியூயார்க் நகரில் இருந்து திட்டம் திட்டியது. அமெரிக்க மண்ணில் நடந்துள்ள இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

