ஆளே மாறிப்போன கோலி; ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு?
ஆளே மாறிப்போன கோலி; ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு?
ADDED : ஆக 09, 2025 06:26 AM

லண்டன்: கோலியின் புதிய 'லுக்' ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணியின் சீனியர் பேட்டர் கோலி 36. ஏற்கனவே சர்வதேச 'டி-20', டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் கோப்பை வென்று தந்த கையோடு லண்டன் சென்றார். இங்கு பொழுதை கழிக்கிறார். இவரது 'லேட்டஸ்ட்' போட்டோவில் வெள்ளை தாடியுடன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறிப் போயுள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கோலி, 'நான்கு நாளுக்கு ஒரு முறை தாடிக்கு 'டை' அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது அர்த்தம்,' என குறிப்பிட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் முத்திரை பதித்தனர். இதனால் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற இருப்பதை தான் கோலியின் வெள்ளை தாடி உணர்த்துவதாக சில ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதை மறுக்கும் வகையில் நேற்று லண்டனில் வலை பயிற்சியை துவக்கினார் கோலி. வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் (அக்.19-25) களமிறங்க வாய்ப்பு உண்டு.