டிரம்ப் தோற்கவில்லை…: புடின் வெற்றி பெற்றுள்ளார்: முன்னாள் ஆலோசகர்
டிரம்ப் தோற்கவில்லை…: புடின் வெற்றி பெற்றுள்ளார்: முன்னாள் ஆலோசகர்
UPDATED : ஆக 16, 2025 10:31 PM
ADDED : ஆக 16, 2025 10:27 PM

வாஷிங்டன்: அலாஸ்காவில் நடந்த சந்திப்பில் அதிபர் டிரம்ப் தோற்கவில்லை. அதேநேரத்தில் ரஷ்ய அதிபர் புடின் வெற்றி பெற்றுள்ளார் என டிரம்ப்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது என இருவரும் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் தோல்வி அடையவில்லை. அதேநேரத்தில் இதில் புடின் வெற்றி பெற்றுள்ளார். மாநாட்டின் முடிவில் இன்னும் சந்திப்பு என்பதைத் தவிர டிரம்ப் ஏதும் கொண்டு வரவில்லை. ஆனால், உறவை நிலைநாட்ட புடின் நீண்ட தூரம் சென்றுவிட்டார். அது தான் அவரது குறிக்கோள் என நான் நம்பினேன். அவர் பொருளாதார தடைகளில் இருந்து தப்பிவிட்டார். போர் நிறுத்தம் என்பதை சந்திக்கவில்லை. அடுத்த சந்திப்பு எப்போது என முடிவு செய்யப்படவில்லை. இருவரும் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்னர் எதுவும் சொல்லவில்லை. சந்திப்பின் போது டிரம்ப் சோர்வாக காணப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.