ADDED : ஆக 03, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொமாகோ:மாலியின் முன்னாள் பிரதமர் மவுசா மாரா, ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ ஜெனரல் அசிமி கோய்டாவுக்கு எதிராக சமீபத்தில் ஜனநாயக ஆதரவு போராட்டம் நடந்தது
இதில் கைது செய்யப்பட்டவர்களை, முன்னாள் பிரதமர் மவுசா மாரா சிறைக்கு சென்று சந்தித்தார். அதன் பின் சமூக வலைதளத்தில், 'எவ்வளவு நேரம் இரவு நீடித்தாலும், சூரியன் தோன்றும்' என பதிவிட்டிருந்தார்.
இது பொது மக்களை துாண்டும் கருத்தாக இருப்பதாக கூறி அவரை கைது செய்துள்ளனர்.