ADDED : பிப் 26, 2024 11:41 PM

காஸா: இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதையெடுத்து, இன்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஷதாயே திடீர் ராஜினமா செய்தார்.
கடந்தாண்டு, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்-காசா போர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 30,000 பேர் பலியாகியுள்ளனர்.போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை
இந்நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகமது ஷதாயே இன்று ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபருக்கு அனுப்பினார்.
ராஜினாமா கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சவால்களை முறியடித்து சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடிய புதிய அரசைஅமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

