ADDED : டிச 23, 2025 11:12 AM

ரியாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முப்படை தலைமைத் தளபதி, பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு சவுதி அரேபியாவின் மிக உயரிய 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது வழங்கப்பட்டது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு, அசிம் முனீர் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அப்போது அவருக்கு சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இந்த விருதை வழங்கினார். இது தேசிய சேவை, சிறந்த பங்களிப்பு போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. அசிம் முனீர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விருது, பாகிஸ்தான் -மற்றும் சவுதி அரேபியா இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவின் அடையாளம் என்று அசிம் முனீர் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2016ல் 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

