சொந்த மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய பாகிஸ்தான் விமானப்படை: அப்பாவிகள் 30 பேர் உயிரிழப்பு
சொந்த மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய பாகிஸ்தான் விமானப்படை: அப்பாவிகள் 30 பேர் உயிரிழப்பு
UPDATED : செப் 22, 2025 03:47 PM
ADDED : செப் 22, 2025 03:21 PM

இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் காயமடைந்தனர்.
பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திராஹ் பள்ளத்தாக்கில் உள்ள மாத்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இன்னும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சொந்த மக்கள் மீது விமானப்படை மூலம் வெடிகுண்டுகளை வீசியதற்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய இந்த பகுதி, ஆப்கன் எல்லையை ஒட்டிய மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தியா நடத்திய ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை இங்கு மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.